ஒரே புகைப்படம்… 5000 சிம் கார்டுகள்… அதிர்ச்சியில் காவல்துறை!!

ஒரே நபரின் புகைப்பட அடையாளத்தை வைத்து தமிழ்நாட்டில் 5000 செல்போன் எண்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நபரின் புகைப்படத்தை வைத்து பல சிம்கார்டுகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட…

ஒரே நபரின் புகைப்பட அடையாளத்தை வைத்து தமிழ்நாட்டில் 5000 செல்போன் எண்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு நபரின் புகைப்படத்தை வைத்து பல சிம்கார்டுகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சைபர் க்ரைம் போலீசாரின் விசாரணையில் சுமார் 5000 செல்போன் எண்கள் இதேபோன்று பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. (உதாரணமாக முருகன் என்ற பெயரில் அவரது புகைப்பட அடையாளத்தை வைத்து 10 செல்போன்கள் பயன்படுத்தப்பட்ட வருவது ).

இது தொடர்பாக தமிழ்நாட்டில் எவ்வளவு போலியான சிம் கார்டுகள் இயங்கி வருகின்றன என்பது குறித்து மாநில சைபர் கிரைம் போலீசார் தீவிர தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். ஒரே ஒரு புகைப்பட அடையாளத்தை வைத்து பல சிம் கார்டுகள் வழங்கப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஈடுபட்ட சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் மீது கைது நடவடிக்கையும் பாய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோல் சைபர் கிரைம் குற்றங்களில ஈடுபட்டதாக தமிழ்நாட்டில் 20,000 செல்போன் எண்களை முடக்க சைபர் கிரைம் போலீசா நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் தற்போது வரை ஏழு நாட்களில் 9,500 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.