12 மணி நேர வேலை – மே 12ம் தேதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்!!

12 மணி நேர வேலை சட்டமசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டத்தற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள், மே 12 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை…

12 மணி நேர வேலை சட்டமசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டத்தற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள், மே 12 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து
12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் பல எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது.

 

அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். தொழிலாளர்கள் தினசரி 12 மணி நேரம் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : 80 ஆண்டுகளுக்குப் பின்….. இரண்டாம் உலகப் போரின்போது கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் கண்டுபிடிப்பு!!

இந்நிலையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சிஐடியு, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 12 மணி நேர வேலை சட்டத்தை அரசு திரும்ப பெற வலியுறுத்தி மே 12-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், ஏப்ரல் 27-ம் தேதி வேலைநிறுத்தம் தொடர்பாக நோட்டீஸ் வழங்க முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.