நாகை பேருந்து நிலையத்தில் தானாக ஸ்டார்ட் ஆகி விபத்துக்குள்ளான தனியார் பேருந்து!

நாகை புதிய பேருந்தில் நிறுத்தியிருந்த தனியார் பேருந்து தானாக ஸ்டார் ஆகி  அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.இதில் வியாபாரி படுகாயத்துடன் உயிர் தப்பினார். நாகப்பட்டினத்தில் புதிய பேருந்து நிலையத்தில் காரைக்காலிலிருந்து திருவாரூர்…

நாகை புதிய பேருந்தில் நிறுத்தியிருந்த தனியார் பேருந்து தானாக ஸ்டார் ஆகி  அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.இதில் வியாபாரி படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
நாகப்பட்டினத்தில் புதிய பேருந்து நிலையத்தில் காரைக்காலிலிருந்து திருவாரூர் செல்லக் கூடிய தனியார் பேருந்து வந்தது.  அடுத்த பயணத்திற்கு கால அவகாசம் இருந்ததால் ஓட்டுநர் பாலமுருகன் என்பவர் பேருந்து இன்ஜினை நிறுத்திவிட்டு சாவியை எடுக்காமல் அருகிலுள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார்.  அப்போது சில பயணிகள் பேருந்தில் ஏறியுள்ளனர்.
அப்போது திடீரென பேருந்து இன்ஜின் ஸ்டார்ட் ஆகி பேருந்து ஓட தொடங்கி வெள்ளரி பிஞ்சு வியாபரம் செய்யும் வடவூர் பகுதியைச் சேர்ந்த தங்கையன் என்ற முதியவர் மோதியது.  இதில் அவர் படுகாயம் அடைந்தார்.   மேலும் இறுதியாக திருச்சி செல்வதற்காக நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதியது.  நல்லவிதமாக வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.