திண்டிவனம் அருகே 350 கிராம் கஞ்சா பறிமுதல்!

திண்டிவனம் கோட்டக்குப்பம் பகுதியில் ஒரே நாளில் மட்டும் 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில்…

திண்டிவனம் கோட்டக்குப்பம் பகுதியில் ஒரே நாளில் மட்டும் 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில் குமார் உத்தரவின் பேரில் கஞ்சா நடமாட்டத்தில் உள்ளவர்களை போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கோட்டக்குப்பம் ஈ.சி.ஆர் சாலை ரவுண்டானாவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். இருவரிடமும் 240 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.

இதை தொடர்ந்து ஈ.சி.ஆர் சாலை நடுக்குப்பம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இளைஞரை சோதனை செய்த போது 110 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது, உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.

இதை போல் புதுவை – திண்டிவனம் புறவழி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அஜித்குமார் (27) என்பவர் வாகனத்தில் கஞ்சா உடன் வந்தது தெரியேவே அவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர் . மேலும் கோவடி கிராமத்தை சேர்ந்த பிச்சை முத்து என்பர் புதுச்சேரி பகுதியில் இருந்து கடத்தி வந்த சாரய பாக்கெட்டுகளை போலீசாருக்கு பயந்து சாலையில் வீசிவிட்டு சென்றுள்ளார்.வீசிவிட்டு சென்ற 27 சாராய பக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து பிச்சை முத்தை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரே நாளில் மட்டும் மூன்று இடங்களில் 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.