பாலக்காடு அருகே சிக்னலில் நின்ற கார் மீது மோதிய பேருந்து – அதிர்ச்சி வீடியோ!

பாலக்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிக்னலில் நின்று கொண்டிருந்த காரின் பின்புறம் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. கேரளா மாநிலம், பாலக்காடு திருச்சூர் நெடுஞ்சாலை சிக்னலில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த…

பாலக்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிக்னலில் நின்று கொண்டிருந்த காரின் பின்புறம் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
கேரளா மாநிலம், பாலக்காடு திருச்சூர் நெடுஞ்சாலை சிக்னலில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த தனியார் பேருந்து காரின் பின்புறம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. பேருந்து மோதிய வேகத்தில் கார் முன் சென்றது; கார் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் சாலையின் மறுபுறம் வளைந்து நின்றது.
காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் இருந்தனர். மூவரும் எந்தவித பாதிப்புமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  பேருந்து மோதியதில் கார் நிலை தடுமாறி ரவுண்டானவை சுற்றி வரும் காட்சிகள் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.