மீன்பிடி தடைக்காலம் முடிந்து உற்சாகத்துடன் மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்!

மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுபடகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். தமிழ்நாட்டின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் கடந்த ஏப்ரல்…

மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுபடகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜீன் 13ம் தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலம் என வரையறுக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது.

இந்த தடைக்காலம் முடிவடைந்த நிலையில், நேற்று மீனவர்கள் கடலுக்குச் செல்ல தங்களது விசைப்படகுகளில் ஐஸ் ஏற்றுவது, வலைகளை சரி செய்வது, டீசல் நிரப்புவது, உதிரி பாகங்களை பழுது பார்ப்பது, தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீரை நிரப்புவது போன்ற வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, காரங்காடு, திருப்பாலைக்குடி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுபடகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.‌ இந்நிலையில் விசைப்படகுகளுக்கு சனிக்கிழமை முதல் படகுகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மீன்பிடிக்க அனுமதிக்கப்பட‌ உள்ளனர்

சே.அறிவுச்செல்வன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.