முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

நீதிமன்ற ஜன்னல் கண்ணாடியை உடைத்து கையை காயப்படுத்திய கைதி

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கைதி, தனது கைவிலங்கை அவிழ்த்துவிடாத ஆத்திரத்தில் நீதிமன்ற ஜன்னல் கண்ணாடியை கையால் உடைத்து காயப்படுத்தி கொண்டார்.

 

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் மணி என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கிறாகாக மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு காவல்துறையினர் மணியை அழைத்து சென்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

அப்போது, தனது கைவிலங்கை அவிழ்த்து விடும்படி பாதுகாப்பிற்கு நின்ற காவல்துறையினரிடம் அவர் கேட்டுள்ளார். ஆனால் போலீசார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணி, நீதிமன்றத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடியை தனது கைகளால் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.

இதனால், ஜன்னால் கண்ணாடிகள் அவரது கையில் குத்தியதால் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கைதி தனது ஜன்னால் கண்ணாடியை உடைத்து தனது கைகளை காயப்படுத்தி கொண்ட சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பேரறிவாளனுக்கு 1 மாதகாலம் பரோல் நீட்டிப்பு

EZHILARASAN D

வருமானவரி தேதி நீட்டிப்பு!

அரிய வகை நோய் பாதிப்பு; சிறுமி மித்ராவுக்கு ரூ16 கோடி மதிப்பிலான மருந்து செலுத்தப்பட்டது

G SaravanaKumar