பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து!

பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி…

பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பள்ளிகளிலேயே வேலைவாப்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. 10, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் http://www.tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்துகொள்ளலாம்.

வேலைவாய்ப்பு பதிவு, கூடுதல் பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை இ-சேவை மையங்களிலும் மேற்கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடந்த ஆண்டு வரை 10, 12-ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு அவரவர் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மேற்கொள்ளப்பட்டு, அனைவருக்கும் ஒரே பதிவு மூப்பு எண் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பள்ளிகளிலேயே வேலைவாப்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.