“தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும்!” – ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாட்டில் இருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது,

”மாநிலங்கள் இல்லாமல், இந்தியா வளர முடியாது. ஒன்றிய அரசு எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும். தேர்தல் அரசியலுக்காக பாஜக சட்டங்களை கொண்டு வர நினைக்கிறது. அரசியலமைப்பை பாதுகாக்கவே தற்போது சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது. ஆனால், அது அரசியலில் பிரதிபலிக்கவில்லை. மாநில சுயாட்சிக்காக கருணாநிதியும் ஜெயலலிதாவும் குரல் கொடுத்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மாறுபடும் நேரத்தில் நமக்கான உரிமை பறிபோகும். நீட்டை விட முக்கியமான தீரம்னம் தொகுதி மறுவறையறைக்கு எதிரான தீர்மானம். தொகுதி மறுவறையறைக்கு எதிராக முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். அதனை வரவேற்கிறோம். தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த திமுகவிற்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றி.

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்படும்போது தமிழ்நாட்டின் 39 எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்யாமல், மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

Fair Demilitation அல்ல Freeze Delimitation தான் தற்போது தேவையானது. தொகுதிகளை 50% உயர்த்தினாலும் வட இந்திய ஆதிக்கம் உருவாகும். 5 முதல் 6 இந்தி பேசும் மாநிலங்கள் ஒன்றிணைந்தாலே பிரதமரை தேர்வு செய்யலாம் என்ற சூழல் உள்ளது, அது மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்” என்று அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.