இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுகளில் இன்று 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று 6.4 ரிக்டர் அளவிலான பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . ஆனால் சுனாமி வருவதற்கான எந்த சாத்திய கூறுகளும் இல்லை என்று அந்நாட்டின் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் 97 கி.மீ (60.27 மைல்) ஆழத்தில் இருந்ததாகவும், இது மலுகுவின் தலைநகரான அம்போனிலிருந்து தென்கிழக்கே 543 கி.மீ தொலைவில் அமைந்திருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய எந்த உடனடி தகவல்களையும் இந்தோனேசியாவின் பேரிடர் அமைப்பின் (BNPB) செய்தித் தொடர்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை.
இந்தோனேசியா “பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்” , அதாவது நெருப்பு வளையம்
என்று அழைக்கப்படும் ஒரு நில அதிர்வு மண்டலம், பூமியின் மேலோட்டத்தில் உள்ள பல்வேறு தட்டுகளுடன் அடிக்கடி மோதும் போது இந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு, அங்கு இதுவரை 42 ஆயிரத்திற்கும் அதிமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி. ஜேம்ஸ் லிசா









