விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு பேருந்தில் படியில் தொங்கிய
மாணவர்களை காவல் உதவி ஆய்வாளர் எச்சரித்து அனுப்பினார்.
விழுப்புரம் மாவட்டம் , செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து இருந்து பசுமலை
பகுதிக்கு செல்லும் தடம் எண் 11 அரசுப் பேருந்தில், பள்ளி மற்றும் கல்லூரி
மாணவர்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம்
செய்தனர். அவ்வழியாக, ரோந்து பணியில் இருந்த செஞ்சி காவல் நிலைய சிறப்பு
உதவி ஆய்வாளர் கௌரிசங்கர் இதனை பார்த்தவுடன் பேருந்தை பின் தொடர்ந்து சென்றார்.
மேலும், பேருந்தை வழியில் 10 நிமிடம் நிறுத்தி படியில் தொங்கிபடி சென்ற
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை, பேருந்தின் உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினார்.
மீண்டும் இது போன்று பேருந்து படிக்கட்டில் தொங்கினால் வழக்கு பதிவு செய்யப்படும்
என எச்சரித்து அனுப்பி வைத்தார்.
—கு.பாலமுருகன்







