சென்னை எண்ணூரில் 30 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்படுள்ளார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஓய்வு பெற்ற மருத்துவர் பெயரில் ஒருவர் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்பேரில், அங்கு விரைந்த காவல்துறையினர் அந்த போலி மருத்துவரைக் கைது செய்த னர். கைது செய்யப்பட்டவரிடம் மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மாதவரத்தைச் சேர்ந்த சுதர்சன் குமார் (55) என்பதும், எண்ணூர் நேதாஜி நகர் 8-வது தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வருவதாகவும் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட சுதர்சன் குமாரிடம் இருந்து, மேற்கு வங்க மருத்துவக் கல்லூரியில் பயின்றது போன்ற சான்றிதழ் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அவரது கிளினிக்கில் நடத்திய சோதனையில் 1.50 லட்சம் ரூபாய், மருந்து மற்றும் மாத்திரைகள் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.