“வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!” – வானிலை மையம்

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுருப்பதாவது, “ இன்று அதிகாலை 5.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக வரும் 13, 14 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடலில் 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும். வரும் 15 முதல் 17-ந்தேதி வரை மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று காற்று வீசும். தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறினால் ஈரான் பரிந்துரைத்த ‘அக்வான்’ என பெயரிடப்படும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.