மகாராஷ்டிராவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா தானே மாவட்டத்தில் உள்ள பிரைம் கிரிடிகேர் தனியார் மருத்துவமனையில் இன்று காலை 3:40 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து தீயை அனைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
தீ விபத்து காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 20 நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றிய பின்னர், அதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல்கள் தெரியவில்லை என்றும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில அரசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும், காயமடையந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சமும் வழங்குவதாக தெரிவித்துள்ளது.







