தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த கெலவள்ளி அருகே உணவு தேடி கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
கம்பபைநல்லூர் அருகே ஏரிக்கரை ஒன்றின் மீது யானை ஏறிக் கொண்டிருந்தது. அப்போது, தாழ்வாகச் சென்ற மின் கம்பியில் உரசியபோது எதிர்பாரத விதமாக மின்சாரம்
பாய்ந்ததில் ஒற்றை ஆண் யானை பரிதாபமாக உரியிழந்தது. சுமார் ஒரு மணி
நேரத்திற்கு முன்பு இந்த ஒற்றை ஆண் யானையானது கிருஷ்ணாபுரம், அருகே சாலையை
கடந்து பெரிய ஏரி மோட்டுப்பட்டி, வகுத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை கடந்து
கம்பைநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதையும் படிக்க: இறந்த மனைவிக்கு கோயில் கட்டிய விவசாயி – திருப்பத்தூரில் நெகிழ்ச்சி சம்பவம்!
யானை உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனச்சரக அலுவலர் ஆனந்த்குமார், காரிமங்கலம் வட்டாட்சியர் சுகுமார், கம்பைநல்லூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் கம்பைநல்லூர் கால்நடை உதவி மருத்துவர் கனகசபை உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
-ம.பவித்ரா








