விமரிசையாக நடைபெற்ற காஞ்சி திருவெக்கா கோயில் விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு!

காஞ்சியில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காஞ்சி திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  பிரம்மா…

காஞ்சியில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சி திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் ஆழ்வார்களால்
மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 

பிரம்மா அஸ்வமேத யாகம் நடத்த சத்யா விரதத் தலமான காஞ்சிக்கு வந்து, உத்தரவேதி
என்னும் யாகசாலையில் யாகம் வளர்த்தார். ஆனால் தனது மனைவியான சரஸ்வதியை விட்டு யாகத்தைத் தொடங்கினர். இதனால் வெகுண்ட சரஸ்வதி தேவியே வெள்ளப்பெருக்காய் வேகவதி ஆறாய்ப் பெருகிவர, பெருமாள் தானே அணையாய் நதியின் குறுக்கே கிடந்து நதியின் போக்கை மாற்றி யாகத்தின் புனிதத்தீயைக் காத்த தலமே திருவெக்கா ஆகும்.

இதனாலே பெருமாள் வெக்கனை கிடந்தான் என ஆழ்வர்களால் அருளப்படுகிறார். சயன வடிவில் உள்ள பெருமாள் அனைத்து கோயில்களிலும் இடதுபுறத்தில் தலையை வைத்து
வலது புறமாக காட்சியளிப்பார் .இந்த திருக்கோயிலில் மட்டும் திருமழிசை
ஆழ்வருடன் சென்று விட்டு பிறகு வந்து உறங்கியதால் இவர் வலது புறம் தலையை
வைத்து இடது புறமாக சயனகோளத்தில் காட்சியளிப்பது விசேஷமாக கருதப்படுகிறது

இந்த திருக்கோயிலில் பிரம்மோற்சவம் இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கியது. ரோஜா நிற மற்றும் பச்சை நிற பட்டாடை உடுத்திய அனுமன் வாகனத்தில் யதோத்த காரி பெருமாள் மஞ்சள் மற்றும் அரக்கு நிற பட்டாடை உடுத்தி தங்க வைர ஆபரணங்கள் சூடி பெருமாள் எழுந்தருளி பக்தர்கள் புடைசூழ வரதராஜ பெருமாள் கோவிலை சென்றடைவார்.

மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு மூன்றாம் திருவிழா மண்டபத்திற்கு வந்து அங்கு சேவை சாதித்தார். அங்கு பெருமாளுக்கு வான வேடிக்கை நிகழ்த்திக் காட்டப்பட்டது . ஏராளமான மக்கள் தங்களது குடும்பத்துடன் வந்திருந்து சுவாமியையும் வானவேடிக்கை நிகழ்ச்சியையும் கண்டு களித்தனர். மேலும் வழியெங்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் .

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.