சங்க இலக்கியங்கள் முதல் நவீன காலம் வரை வாழும் காதல்…..

சங்க இலங்கியங்களில் தொடங்கி தற்போதைய நவீன உலகம் வரை காதலும், காதலர்களும் இருந்து கொண்டு தான் வருகிறது. ஆனால் காதலை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த…

சங்க இலங்கியங்களில் தொடங்கி தற்போதைய நவீன உலகம் வரை காதலும், காதலர்களும் இருந்து கொண்டு தான் வருகிறது. ஆனால் காதலை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் பண்டைய கால ரோமானியர்கள் திருவிழா என கூறப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் காதலர்களுக்கான, அன்பையும், பாராட்டையும் வெளிப்படுத்தும் நாளாக தற்போது மாறியுள்ளது.

காதலர் தினம்

காதலர் தினம் உலகம் முழுவதும் பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. சில கல்யாணமான தம்பதிகள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக கணவன்/மனைவிக்கு பரிசளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். சிலர் காதலின் அடையாள சின்னமாக விளங்கும் ரோஜா பூவை பரிசளித்து தங்களின் அன்பை வெளிப்படுத்துவர், அல்லது தனது விருப்பத்துக்குரியவர்களிடம் காதலை வெளிப்படுத்துவர்.

காதலர் தினம் என்றாலே அது இளசுகளின் கொண்டாட்டங்கள் ஒருபுறம் களைக்கட்டும். 90ஸ் கிட்ஸ்களின் காலங்களில் காதலர் தினத்தில் கிரீட்டிங் கார்டுடன், காதல் கடிதம், ரோஜா பூ மற்றும் சாக்லேட் வைத்து இளைஞர்கள் தங்களின் காதலிக்கு பரிசளிப்பர். இன்றைய 2k கிட்ஸ்களின் காதலர் தின கொண்டாட்டத்தில் காதல் கடிதம், கிரீட்டிங் கார்டு போன்றவை எல்லாம் அழிந்துபோன ஒன்றாக உள்ளது.

மறைந்த காதலர் தின பரிசுகள்

கிரீட்டிங் கார்டு, காதல் கடிதம், மியூசிக் பாக்ஸ், கீ செயின் போன்ற பொருட்களை பரிமாறி கொண்டனர். வாழ்த்து அட்டைகளை வாங்கி, அதில் கைப்பட எழுதி, காதலருக்கு அனுப்பி, காதலையும், அன்பையும் பரிமாறிக் கொண்ட உணர்வை எதுவும் தராது. எத்தனை வருடங்களானாலும் அதை பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்து, வயதான பின்னர் அதை எடுத்துப் பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி, செல்போன் வாழ்த்துகளில் கிடைக்குமா? என்பது கேள்விக்குறிதான்.செல்போன் வருகைக்குப் பின்னர், வாழ்த்து அட்டைகளை அனுப்புவது வெகுவாகக் குறைந்துவிட்டது. தற்போது, ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர் போன்றவற்றில் காதலையும், வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்கிறார்கள்.

இளைஞர்களுக்கு தான் காதலர் தினம் என்பது தவறு. திருமணமான தம்பதிகள் தங்களின் காதலை பரிமாறி கொள்வது அவர்களின் இடையே இருக்கும் பிணைப்பை மேலும் அதிகப்படுத்தும். திருமணத்திற்கு பிறகான காதல் என்பது வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். அதிலும் ஆண்,பெண் இருவரின் எதிர்பார்ப்புகள் எல்லாம் தீர்ந்து போன பிறகு வரும் காதலானது மரியாதைக்குரியதாகும். அதிலும் குறிப்பாக 50-60 வயதானவர்களின் காதல் மனதிற்கு நெகிழ்ச்சியை தரும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.