அடுத்த சிவகார்த்திகேயன் கவின் தான்- தயாரிப்பாளர் அம்பேத்குமார் புகழாரம்

சிவகார்த்திகேயன் உயரத்திற்கு கவின் வருவார் அதற்கான அனைத்து தகுதியும்  அவருக்கு உள்ளது அடுத்த சிவகார்த்திகேயன் கவின் தான்”  என தயாரிப்பாளர் அம்பேத்குமார் தெரிவித்துள்ளார். கவின்., அபர்ணாதாஸ், பாக்யராஜ், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில்…

சிவகார்த்திகேயன் உயரத்திற்கு கவின் வருவார் அதற்கான அனைத்து தகுதியும்  அவருக்கு உள்ளது அடுத்த சிவகார்த்திகேயன் கவின் தான்”  என தயாரிப்பாளர் அம்பேத்குமார் தெரிவித்துள்ளார்.

கவின்., அபர்ணாதாஸ், பாக்யராஜ், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில்
‘டாடா’ திரைப்படம் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் படத்தின்
வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார்
நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் நடிகர் கவின் பேசியதாவது..

” படம் வெளியாவதற்கு முந்தைய நாள் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தேன் அதில் இது 12
ஆண்டு கனவு என தெரிவித்தேன். அதை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி. படம் பார்த்து எங்கிருந்தோ அழைத்து பேசிய அனைவருக்கும் நன்றி. சாதாரண மனிதர், தன்னுடைய கனவை மட்டுமே அனுதினமும் நம்பி, தன்னை நம்பி தன் வேலையை நம்பி நேர்மையாக பணியாற்றினால் ஒருநாள் நாம் நினைக்கும் இடத்திற்கு சென்றிடலாம் என்ற
நம்பிக்கையை ஆழமாக மனதில் விதைதற்கு நன்றி.

‘டாடா’ படம் ஒரு நம்பிக்கை. இங்கு மேடையில் இருக்கும் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை, அதை காப்பாற்றிய உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இயக்குநர் கணேஷ் முதல் நாள் என்மேல் வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றியுள்ளேன் என்று நினைக்கிறேன்.

இதனையும் படியுங்கள் : வீக் எண்டுக்கு கிடைத்த ஸ்ட்ராங்கான திரைப்படமா டாடா?

இந்த படத்தை எனது நண்பன் மணிகண்டன் என்பவருக்காக அர்ப்பணிக்கிறேன் அவர்
தற்போது உயிரோடு இல்லை. அவருக்கு நான் அர்ப்பணிப்பதற்கு காரணம் முதன் முதலில்
நான் தொலைக்காட்சியில் வரும் பொழுது விசில் அடித்து ரசித்தவன் அவன் தான். தற்போது இருந்திருந்தால் கூட அவனை விட மகிழ்ச்சியாக யாராலும் இருக்க முடியாது. அவருக்காக ஏதாவது செய்ய  வேண்டும் என தோன்றியது அதற்காகத்தான் இது. எங்கிருந்தாலும் பார்த்துக் கொண்டிருப்பாய் என நம்புகிறேன்”  என கவின் தெரிவித்தார்.

பின்னர் பேசிய தயாரிப்பாளர் அம்பேத்குமார், “சிவகார்த்திகேயனை வைத்து மனம் கொத்தி பறவை படத்தை தயாரித்தேன். படம் வெற்றி பெற்றது. அப்போதும் இதே தனியார் விடுதியில் தான் வெற்றி விழாவை நடத்தினோம். அதேபோல இப்போது வெற்றி விழாவை நடத்துக்கிறோம். சிவகார்த்திகேயன் உயரத்திற்கு கவின் வருவார் அதற்கான அனைத்து தகுதியும் உள்ளது அடுத்த சிவகார்த்திகேயன் கவின் தான்”  என தயாரிப்பாளர் அம்பேத் குமார் புகழ்ந்துள்ளார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.