சத்தியமங்கலத்தில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே வனத் துறையினர் வைத்த கூண்டில் ஆண் சிறுத்தை சிக்கியது. சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப் பகுதியைவிட்டு வெளியேறிய சிறுத்தை, ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளைக்…

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே வனத் துறையினர் வைத்த கூண்டில் ஆண் சிறுத்தை சிக்கியது.

சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப் பகுதியைவிட்டு வெளியேறிய சிறுத்தை, ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளைக் கடித்துக் கொன்று வந்தது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்தனர். இதையடுத்து, அந்த சிறுத்தையை வனத் துறையினர் கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வனப் பகுதியை ஒட்டியுள்ள குப்புசாமி என்பவரின் தோட்டத்தில் சிறுத்தையைப் பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு இன்று அதிகாலை வந்த சிறுத்தை வனத் துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். கூண்டில் சிக்கியது ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தில் சிறுத்தையை ஏற்றி அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டும் செல்லும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தை கூண்டில் சிக்கியது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.