கோழியை பிடிக்க வந்த சிறுத்தை கூண்டில் சிக்கி பலி- கேரளாவில் பரபரப்பு

கோழியை பிடிக்க வந்த சிறுத்தை கோழிக் கூண்டிலேயே சிக்கி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் மன்னார்காட்டில் வன விலங்குகளான யானை, சிறுத்தை, மான், காட்டு எருமைகள், மான்கள் வசிக்கின்றன.…

கோழியை பிடிக்க வந்த சிறுத்தை கோழிக் கூண்டிலேயே சிக்கி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் மன்னார்காட்டில் வன விலங்குகளான யானை, சிறுத்தை, மான், காட்டு
எருமைகள், மான்கள் வசிக்கின்றன. இவைகள் அவ்வப்போது குடியிருப்புகளுக்குள் உலா வருவது  வழக்கம். இதனால் மனித-வனவிலங்கு மோதல்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள்
ஏற்படுகின்றன.

அந்த வகையில் மன்னார்காடு கண்டங்கமங்களம் , பூவத்தானி மலை கிராமம் ஒன்றில் சிறுத்தை அடிக்கடி உலா வந்ததது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் பச்சிளம் குழந்தையை தூக்கிச்சென்று கொன்ற சிறுத்தை தொடர்ந்து ஆடுகள், மாடுகள்,  கோழிகளை பிடித்து கொன்று உண்டு வ்ந்தது.

இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாடுவதற்கு அச்சபட்டதோடு, வளர்ப்பு பிராணிகளுக்கு கூண்டு வைத்து இரவில் பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் கோழிக்காக வைத்த கூண்டில் கோழி பிடிக்க வந்த சிறுத்தை சிக்கியிருக்கின்றது.

பிலிப் என்பவரின் வீட்டில் உள்ள கோழி கூண்டில் கோழி பிடிக்க வந்த சிறுத்தை கைகள் மாட்டி சிக்கி வெளியே வர முடியாமல் பெரும் சத்தத்துடன் உறுமியது. சிறுத்தை உறுமுகின்ற சத்தினை கேட்ட வீட்டின் உரிமையாளர் பிலிஃப் உடனடியாக கோழி கூண்டை பார்த்து பீதியில் உறைந்திருக்கின்றார்.

சிறுத்தை அவரை ஆக்ரோசமாக பாய முற்பட்டதைத தொடர்ந்து காவல் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தந்திருக்கின்றார். பின்னர் கோழி கூண்டு தார் பாயால் மூடப்பட்டு,கால்நடை மருத்துவர் அருண் சக்கிரியா தலைமையிலான வனத்துறை மருத்துவ குழு மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க
திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் வலையில் சிக்கி உறுமிய காயமான சிறுத்தை, சிகிச்சை பலனின்றி எதிர்பாரா விதமாக பலியானது. இந்த நிலையில் வன விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள துப்பாக்கி பயன்படுத்த பொதுமக்கள் லைசென்ஸ் கோரியிருக்கின்றனர். கோழி கூண்டில் சிறுத்தை சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறையினர் வலியுறுத்தியிருக்கின்றனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.