உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தில்லை நடராஜரைக் களங்கப்படுத்திய கயவனைச் சிவனடியார்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகும் கைது செய்யாமல் காப்பாற்றி வருகிறது இந்த திமுக அரசு எனக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும், மறுபுறம், கனல் கண்ணன் தெரிவித்த கருத்திற்கு உடனடியாக கைது செய்துள்ள இந்த திமுக அரசின் நடவடிக்கைகளின் மூலமாகக் கருத்துச் சுதந்திரத்திலும் இவர்களது இரட்டை நிலைப்பாட்டையும் மக்கள் விரோத போக்கையும் வெளிப்படுத்தி விட்டார்கள் எனக் கூறியுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘திருச்சியிலிருந்து 435 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்!’
https://twitter.com/annamalai_k/status/1559208190503399425?s=24&t=4Mz8_r63i6xNwyERL2esBA
சாமானிய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்துவரும் இந்த திமுக அரசு, கனல் கண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் கோரிக்கை எனவும் தெரிவித்துள்ள அவர், உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.








