திருச்சியிலிருந்து 435 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்!

தொடர் விடுமுறையின் காரணமாக வெளியூர் சென்றவர்கள் செந்த ஊர் திரும்புவதற்கு ஏதுவாக திருச்சியிலிருந்து 435 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. தொடர் விடுமுறையின் காரணமாக ஆகஸ்ட் 12,13,14 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர்,…

தொடர் விடுமுறையின் காரணமாக வெளியூர் சென்றவர்கள் செந்த ஊர் திரும்புவதற்கு ஏதுவாக திருச்சியிலிருந்து 435 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

தொடர் விடுமுறையின் காரணமாக ஆகஸ்ட் 12,13,14 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார் குடி, நன்னிலம், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, ஆகிய ஊர்களுக்குக் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது.

அண்மைச் செய்தி: ‘‘புத்தகக் கண்காட்சி; பள்ளிக்கல்வித்துறை சார்பில் 17 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும்’ – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி’

அந்த வகையில் தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் விதமாகத் திருச்சியிலிருந்து வழக்கத்தை விடக் கூடுதலாகத் திருச்சி சென்னை வழித்தடத்தில் 150 பேருந்துகளும், தஞ்சாவூர் சென்னை வழித்தடத்தில் கூடுதலாக 25 பேருந்துகளும், திருச்சி திருப்பூர் வழித்தடத்தில் 40 பேருந்துகளும், திருச்சி கோயம்புத்தூர் வழித்தடத்தில் 40 பேருந்துகளும், நாகப்பட்டினம் சென்னை வழித்தடத்தில் 50 பேருந்துகளும்,

கும்பகோணம் சென்னை வழித்தடத்தில் 50 பேருந்துகளும் காரைக்குடி சென்னை வழித்தடத்தில் 25 பேருந்துகளும், ராமநாதபுரம் சென்னை வழித்தடத்தில் 25 பேருந்துகளும், புதுக்கோட்டைச் சென்னை வழித்தடத்தில் 30 பேருந்துகளும் எனக் கூடுதலாக 435 பேருந்துகள் திருச்சியிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று இயக்கப்பட்டு வருகிறது. மேலும் நாளை 16-ஆம் தேதி மேற்படி வழித்தடங்களில் 250 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.