மனைவி இறந்த துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்து கொண்ட கணவர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தான் வளர்த்த நாயுடன் உயிரை மாய்த்து கொண்ட நபர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் சின்ன சாயகார தெருவில் வசிப்பவர் பாஸ்கர் இவர்…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தான் வளர்த்த நாயுடன் உயிரை மாய்த்து கொண்ட நபர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் சின்ன சாயகார தெருவில் வசிப்பவர் பாஸ்கர் இவர் பட்டு சேலை வியாபாரம் செய்து வருகிறார். இவரது  வீடு வாடகை விடப்பட்ட இருந்த நிலையில் முதல் மாடியில் கடந்த இரண்டு வருடங்களாக ராஜ்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துணி தைக்கும் டைய்லராக பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ராஜ் நான்கு நாட்களுக்கு முன்பாக அவர் வசித்து வந்த அறையிலுள்ள சுவற்றில், சென்னையிலுள்ள தன்னுடைய மனைவி இறந்து விட்டதாகவும், இனிமேல் நான் வாழ்வதற்கு விருப்பம் இல்லை என ஆங்கிலத்தில்  எழுதி விட்டு, ராஜ் தான் ஆசையோடு வளர்த்து வந்த நாயுடன் சேர்த்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். ராஜ் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டு நான்கு நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில், உடல் அழுகிய நிலையில் துருநாற்றம் வீச தொடங்கியது. இதனை தொடர்ந்து  வீட்டின் உரிமையாளர் பாஸ்கர் என்பவர் வாடகை பணத்தை வாங்குவதற்காக தன்னுடைய வீட்டிற்கு வந்த போது மேல் மாடியில் குடியிருக்கும் ராஜ்  இருந்த அறையில் துருநாற்றம்  அதிகமாக வீசவே, சந்தேகமடைந்த பாஸ்கர் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தார்.

 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜ் தங்கி இருந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அறையில் ராஜ் மற்றும் அவர் வளர்த்து வந்த  நாயும் அழுகிய நிலையில் துருநாற்றத்தோடு தூக்கில் தொங்கியப்படி  காணப்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை வரவழித்து  ராஜ் மற்றும் அவர் வளர்த்து வந்த  நாயின் உடலை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தி, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது மனைவி இறந்த துக்கத்தை தாங்காமல் அவரும் அவர் வளர்த்து வந்த நாய்யும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.