ஆன்லைன் அபராதம் விதிப்பதை கண்டித்து வரும் 6-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் !

சென்னையில், வரும் 6 ந் தேதி ஆன்லைன் அபராதம் விதிப்பதை கண்டித்து தமிழ்நாடு- மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர், தன்ராஜ்…

சென்னையில், வரும் 6 ந் தேதி ஆன்லைன் அபராதம் விதிப்பதை கண்டித்து
தமிழ்நாடு- மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், உண்ணாவிரத
போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர், தன்ராஜ்
நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
கூறுகையில், தமிழகத்தில் இயக்கப்படும் லாரி, ட்ரெய்லர் மற்றும் டேங்கர் லாரி
உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு, ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும், செய்யாத குற்றத்திற்கு அபராதம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

வாகனங்கள் தமிழ்நாட்டில் இயக்கப்படும் போதே, வேறு மாநிலத்தில் இயக்கப்படுவது
போல ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டாக இது போன்ற
பிரச்சினை லாரி உரிமையாளர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. இதனை தமிழக அரசின்
கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்
நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், லாரி
உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும், தமிழக டிஜிபி-யை சந்தித்தும் முறையிட்டோம். இருந்த போதிலும்,
ஆன்லைன் அபராதம் விதிப்பது தொடர்கதையாக உள்ளது. ஆன்லைன்
அபராதத்தால் லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களும்
பாதிக்கினறனர். இதனை கண்டித்து சென்னையில் வரும் 6 ந் தேதி
போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

இதில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்
ஒன்றிணைந்து, ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் முன்பு மாபெரும்
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். காலாவதியான சுங்கச்சாவடிகளையும்
அகற்ற வேண்டும், ஒரு சில அலுவலர்கள் வேண்டுமென்றே ஓவர் லோடு அபராதம்
விதிக்கின்றனர், இதனை அரசு தடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.