நுண் உர செயலாக்க மைய குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…

உசிலம்பட்டி நகராட்சியின் நுண் உர செயலாக்க மைய குப்பை கிடங்கில் தேக்கிவைக்கப்பட்டிருந்த குப்பையில் திடீர் தீவிபத்து  ஏற்பட்டது தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

உசிலம்பட்டி நகராட்சியின் நுண் உர செயலாக்க மைய குப்பை கிடங்கில் தேக்கிவைக்கப்பட்டிருந்த குப்பையில் திடீர் தீவிபத்து  ஏற்பட்டது தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் தேங்கும்
குப்பைகளை சேகரித்து வைத்துள்ளனர். அதில் ஒரு பகுதி உத்தப்பநாயக்கணூர் பகுதிக்கும், பேரையூர் ரோட்டில் உள்ள நுண் உர செயலாக்க மையத்திலும் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் உள்ள குப்பை கிடங்கில் தேக்கி வைக்கப்பட்டு இருந்த குப்பையில் இன்று மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ குப்பை கிடங்கு முழுவதும் பரவியது, இதனால் வெளியேறும் புகை, உசிலம்பட்டி பேரையூர் நெடுஞ்சாலையில் புகை மண்டலமாக மாறி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த மையத்தின் அருகே தனியார் பெட்ரோல் பல்க் இயங்கி வருகிறது. இதனால் பெரும் விபத்து ஏற்படுமோ என அக்கம் பக்கத்தினர்
தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் தங்கம் தலைமையிலான வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.