மதுரை தமுக்கம் மைதானத்தில் கண்கவர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா தொடங்கியது. இதை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர். இந்தத் திருவிழாவில் மணிக்கொருமுறை குலுக்கல் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை ஒரே இடத்தில் சங்கமிக்க வைக்கும் வகையில் ஊரும் உணவும் திருவிழாவை நியூஸ் 7 தமிழ் நடத்துகிறது. மதுரை தமுக்கம் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா, பாரம்பரிய பறை இசையுடன் தொடங்கியது. இந்த உணவுத் திருவிழாவை, பார்வையாளராக வந்த சிறுவன் ஒருவன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் இடம் பெற்றுள்ளன. கிருஷ்ணகிரி நைஸ் பால்கோவா, கீழக்கரை துதல், மார்த்தாண்டம் தேன், நாகை பனங்கிழங்கு கேக், சேலம் ஜவ்வரிசி, இனிப்பு மற்றும் கார வகைகள் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்தது.
காரைக்கால் அல்வா மற்றும் ஜாமூன், பள்ளிப்பாளையம் சிக்கன், திண்டுக்கல் பிரியாணி, 25 வகையான சர்பத், நெல்லை மாப்பிள்ளை ஜூஸ் உள்ளிட்டவற்றை வாங்கி பொதுமக்கள் விரும்பி உண்டனர். கருப்பு கவுணி அரிசி கொண்டு பாரம்பரிய முறைபடி செய்யப்பட்ட
ஐஸ்கிரீம் குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது.
உணவுத் திருவிழாவுக்கு வரும் வாடிக்கையாளர்களில் மணிக்குகொருமுறை குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கிரைண்டர் பரிசாக வழங்கப்படுகிறது. பார்வையாளர்களை பென்சில் ஒவியம் வரைந்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.