செங்கம் அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 7 பேர் பலி, 4 பேர் கவலைக்கிடம்…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அந்தனூர் பகுதியில் திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து வந்த அரசு…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

அந்தனூர் பகுதியில் திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து வந்த அரசு பேருந்தும், திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஓசூரை சேர்ந்த காமராஜ், பிசேஸ் முர்மு, ராஜா மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த எஸ்டிபன் கோரோ சமோன் ஆராஞ்சி, குண்சுராய் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் டோலா, விஸாஸ், சுபா கிஸ்டபா ஆகிய 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.