ஆவடி ரெயில் நிலையத்திற்கு வந்த புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் தடம் புரண்டன.
அண்ணணூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்துக்கு வந்த புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில், நிற்காமல் சிக்னலை கடந்து சென்ற நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த விபத்து பனிமூட்டம் காரணமாக நடந்ததா? அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆவடி ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை நோக்கி வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளனதால், வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.







