கன்னியாகுமரியில், இட்லி தட்டு துவாரத்தில் சிக்கி தவித்த 4 வயது குழந்தையின் கை விரலை, நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு
தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், லூர்து மாதா தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஆரோக்கிய சேல்வியஸ். இவருக்கு ஜாபி என்ற 4 வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தை இட்லி தட்டை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக குழந்தையின் கை விரல் இட்லி தட்டில் இருக்கும் துவாரத்தில் சிக்கிக் கொண்டது.
இதனால் , பயத்தில் குழந்தை அழ ஆரம்பித்தது. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் எவ்வளவோ முயன்றும் , குழந்தையின் விரலை இட்லி தட்டின் துவாரத்திலிருந்து மீட்க முடியவில்லை. இதனால், குழந்தையை கன்னியாகுமரி தீயணைப்பு அலுவலகத்திற்கு எடுத்துவந்து , மீட்டு தருமாறு தீயணைப்புத் துறையிடம் உதவி கோரினர்.
மாவட்ட அலுவலரின் அனுமதியுடன் நாகர்கோவிலிலிருந்து அவசரகால மீட்பு ஊர்தி வரவழைக்கப்பட்டது. மேலும், கருவிகள் உதவியுடன் இட்லி தட்டு சிறிது சிறிதாக வெட்டி எடுக்கப்பட்டு, குழந்தை பாதகாப்பாக மீட்கப்பட்டது. இதனால், குழந்தையின் பெற்றோர் தீயணைப்புத் துறையினருக்கும், அவசர கால மீட்பு போலீஸாருக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.
—-கு.பாலமுருகன்







