சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்!

கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவில் அருகே சாலையில் இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரித்தால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் . இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன்…

கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவில் அருகே சாலையில் இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் . இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மருத்துவமனைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வாகனத்தில் இருந்து புகை எழும்பியது .

தொடர்ந்து, வண்டியை நிறுத்திவிட்டு புகை எழுந்த பகுதியை பார்த்தபோது
திடீரென வாகனம் தீப்பற்றி எரிந்ததுள்ளது. இதனால் , அதிர்ச்சி அடைந்த ராஜாராம்
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார் . விரைந்து வந்த
தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் அந்த குடும்பம்
வாகனத்தை நிறுத்திவிட்டு விலகியதால் எவ்வித பாதிப்பும் இன்றி தப்பினர்.

—கு.பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.