பென்னாகரம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

பென்னாகரம் அருகே விவசாய நிலத்தில் காவலில் இருந்தபோது யானை தாக்கி விவசாயி உயிரிழந்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கே.குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி மகாராஜன் (வயது 70). இவர் பென்னாகரம் வனச்சரகத்தை ஒட்டி உள்ள கே.குள்ளாத்திரம்பட்டியில் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக நிலத்தில் குடிசை அமைத்து காவல் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது நள்ளிரவு காட்டு யானை ஒன்று மகாராஜனை தாக்கியுள்ளது. இதில் மகாராஜன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் விவசாய பணிக்கு சென்ற விவசாயிகள் மகாராஜன் இறந்த கிடப்பதை கண்டு அவரது உறவினர்களுக்கும் பென்னாகரம் வனத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மகாராஜன் உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையில் ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த மகாராஜனுக்கு மணிமேகலை என்ற மனைவியும் மாதையன் என்ற மகனும் உள்ளனர். யானை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.