பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மதுபோதையில் விமானத்தில் அத்துமீறியதால் அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் தீவிரவாதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் அன்னையும் ரசூலும், ஈஸ்க், WHO, Mask உள்ளிட்ட பல படங்களில் நடித்து மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பீஸ்ட் தோல்வியை தொடர்ந்து அளித்த பேட்டி ஒன்றில், தன்னை படத்தில் டம்மியாக காட்டியதாக ஷைன் டாம் சாக்கோ குற்றம்சாட்டினார். “பீஸ்ட் படத்தின் காட்சிகளில் லாஜிக் இல்லை என்றும் ஒருவர் பொதுவாக அதிகமான எடையைக் கையில் தூக்கினால் முகத்தில் கஷ்டம் தெரியும். ஆனால் அப்படி எந்தவிதமான முக பாவனைகளும் விஜய் முகத்தில் தெரியவில்லை என்றும் கூறினார்.மேலும் தீவிரவாதியை விஜய் கையில் சூட்கேஸாக தூக்கி வரும் காட்சிகள் லாஜிக்கே இல்லாதவை” என்று கூறியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள், ஷைன் டாம் சாக்கோவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டனர். இதனைத் தொடர்ந்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ விஜய் ரசிகர்களிடையே மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்தார்.
இந்த நிலையில் ‘பாரத சர்க்கஸ்’ என்ற மலையாள திரைப்படத்தின் ஷைன் டாம் சாக்கோ நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சாக்கோ கடந்த 10ஆம் தேதி படக்குழுவுடன் ஏர் இந்தியா விமானத்தில் துபாய் புறப்பட்டார். அப்போது விமானத்தில் இருந்த சாக்கோ, விமானிகள் அறை என அழைக்கப்படும் காக்பிட் பகுதிக்குள் நுழைய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அவரை தடுத்தும் மீண்டும் நுழைய முயன்றுள்ளார். இதனையடுத்து விமான ஊழியர்கள் குடிவரவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார்.
பின்னர் அதிகாரிகள் அவரை விமானத்தில் இருந்து இறக்கி விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் போதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது விமானி அறையை பார்க்க ஆசைபட்டதாகவும் அதனை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட ஆசைபட்டதாகவும் விளக்கம் அளித்தார். இதனையடுத்து அவரை அதிகாரிகள் எச்சரித்து அடுத்த விமானத்தில் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்.