முக்கியச் செய்திகள் தமிழகம்

‘இனி படத்தில் நடிக்க மாட்டேன்’- உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதால் இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். அமைச்சராக பொறுப்பேற்றதால் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க முடியாத சூழல் உள்ளது. மாமன்னன் தான் நடிகராக எனது கடைசி திரைப்படம்.

என் மீது விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன். முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன். விளையாட்டு வீரர்களுக்கு ஊக்குவிக்கும் பணிகளில் ஈடுபடுவேன். தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். அதை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஃபகத் பாசிலின் ‘மாலிக்’ வெளியாகும் தேதி அறிவிப்பு

Vandhana

புத்தாண்டு கொண்டாட்டம்; காவல்துறை வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

Halley Karthik

ஓட்டுப்போட தேவையான ஆவணங்கள் என்னென்ன?

Gayathri Venkatesan