கார் கண்ணாடியை உடைத்த ஆர்சிபி வீராங்கனைக்கு TATA நிறுவனம் அளித்த க்யூட் பரிசு!

மகளிர் பிரீமியா் லீக் போட்டியில் ஆர்சிபி வீராங்கனை எல்லீஸ் பெர்ரிக்கு அவர் உடைத்த கார் கண்ணாடியை நினைவுப் பரிசாக டாடா நிறுவனம் பரிசளித்துள்ளது. இந்தியாவில் பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று…

மகளிர் பிரீமியா் லீக் போட்டியில் ஆர்சிபி வீராங்கனை எல்லீஸ் பெர்ரிக்கு அவர் உடைத்த கார் கண்ணாடியை நினைவுப் பரிசாக டாடா நிறுவனம் பரிசளித்துள்ளது.

இந்தியாவில் பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.  இதில் கடந்த 4-ம் தேதி ஆர்சிபி- உபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

அப்போது ஆர்சிபி அணியின் எலிஸ் பெர்ரி அடித்த பந்து, சிறந்த வீராங்கனைக்காக வழங்க இருந்த கார் கண்ணாடியை தாக்கியது. இதில் டாடா (TATA) நிறுவனத்தின் கார் கண்ணாடி உடைந்து சிதறியது.

https://twitter.com/TeaKadaTalk/status/1768887826094207482

இந்நிலையில் உடைந்த கார் கண்ணாடியை ஃப்ரேம் (Frame) செய்து எலிஸ் பெர்ரிக்கு அந்நிறுவனம் பரிசாக அளித்துள்ளது.  அதில் “பெர்பரி பவர்புல்பஞ்ச் (PerryPowerfulPunch)” என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது.  எலிஸ் பெர்ரி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சேர்ந்த வலது கை பேட்ஸ்வுமன் ஆவார்.  மேலும், 33 வயதான அவர் இந்த சீசனிலா் 8 போட்டிகளில் 312 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.