சமூல வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைத்தள பக்கங்கள் பாதுகாப்பானதா என்றால், இல்லை என்பதுதான் உன்மை. தொழில் போட்டி முதல் மற்றவர்களின் அந்தரங்களைத் திருடுவது வரை பல காரங்களுக்காக இந்த ஹேக்க்கிங் நடத்தப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக இதில் பிரபலங்களின் சமூக வலைத்தள பக்கங்கள் அதிகம் ஹேக் செய்யப்படுவது ஒரு வாடிக்கையாகி விட்டது. ஒரு சாமானியனின் சமூக வலைத்தள பக்கத்தை ஹேக் செய்வதால் ஹேக்கர்களுக்கு எந்த பயனும் இல்லை எனவே, பிரபலங்களின் சமூக வலைத்தள பக்கங்களைக் குறிவைக்கின்றனர்.
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 1996-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ரம்பத்து என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து நீதான அவன், அவர்களும் இவர்களும், உயர்திரு, 420, அட்டக்கத்தி, உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இவர் சின்னதிரையில் ரியாலிட்டி ஷோக்களுக்கு தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு வெள்ளித் திரையில் களமிறங்கிக் கலக்கி வருகிறார். அத்துடன் இவர் தமிழ் திரைப்படம் மட்டுமல்லாது மலையாள படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சமூல வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவரை லட்சக்கணக்கான ஃபாலோவர்களை தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில்தான், டிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இவரின் டிவிட்டர் பக்கத்தை மீட்டு எடுப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.