இரவின் நிழல் படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரிய வழக்கு; பதிலளிக்க உத்தரவு!

இரவின் நிழல் படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது மகள் பதிலளிக்கச் சென்னை வணிக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருது பெறும் நோக்குடன் ‘இரவின் நிழல்‘ என்ற படத்தைத்…

இரவின் நிழல் படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது மகள் பதிலளிக்கச் சென்னை வணிக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருது பெறும் நோக்குடன் ‘இரவின் நிழல்‘ என்ற படத்தைத் தனது அகிரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பதாகக் கூறி, நவீன் எண்டர்பிரைசஸ் பாஸ்கர ராவிடம் படப்பிடிப்புக்குத் தேவையான ஒளிப்பதிவு சாதனங்களைக் குறைந்த வாடகையில் நடிகர் பார்த்திபன் வாங்கியுள்ளார். அதற்கான வாடகை பாக்கி 25 லட்சத்து 13 ஆயிரத்து 238 ரூபாயை செட்டில் செய்யாமல் ஜூலை 15ஆம் தேதி படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி பாஸ்கர் ராவ் வழக்கு தொடர்ந்தார்.

அண்மைச் செய்தி: ‘அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக்கோரிய வழக்கு; தள்ளுபடி செய்தது சென்னை உரிமையியல் நீதிமன்றம்’

https://twitter.com/rparthiepan/status/1545048367809499139

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, வழக்கு குறித்து நடிகர் பார்த்திபன், அவரது நிறுவனம், அதன் இயக்குநரான அவரது மகள் கீர்த்தனா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12-க்கு தள்ளிவைத்துள்ளார். இதனால், திட்டமிட்டபடி ஜூலை 15ஆம் தேதி இரவின் நிழல் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.