சாதிப் பெயரை சொல்லி திட்டியதால் பேரூராட்சி தலைவி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி பேரூராட்சியில், டெங்கு மஸ்தூர் பணியாளர் முத்துலட்சுமி ஒப்பந்த அடிப்படையில் கடந்த 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், முத்துலட்சுமியை காரணமின்றி பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நீக்கப்பட்ட பெண்ணை மீண்டும் பணி அமர்த்த கோரி பேரூராட்சி அலுவலகத்தை அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 2 ஆம் தேதி முற்றுகையிட்டனர். வத்திராயிருப்பு காவல் துறையினர் முற்றுகையிட்ட பொதுமக்கள், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து பணியில் இருந்து நீக்கிய டெங்கு மஸ்தூர் பணியாளரை பணியில் சேர்ப்பதற்காக பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்ததனர்.
மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் பணியில் இணைப்பது சம்பந்தமாக திமுக கட்சியை சேர்ந்த பேரூராட்சி தலைவரிடம் பரிசீலனை செய்து பின்னர் தங்களுக்கு தகவல் கொடுக்கப்படும் என கூறியதை அடுத்து
முற்றுகையிட்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்ற
நிலையில் இதுவரை பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பொறுமை இழந்த முத்துலட்சுமி பணியிலிருந்து நீக்கியதற்கான காரணம் குறித்து, கேட்க , திமுக பேரூராட்சி தலைவி சுப்புலட்சுமியை பார்க்க சென்றுள்ளார். அப்போது முத்துலட்சுமியை பேரூராட்சி தலைவியின் கணவர் சாந்தாராம் சாதிப் பெயரை சொல்லி திட்டியதுடன் தாக்க முயன்றுள்ளார்.
இதுகுறித்து, முத்துலெட்சுமி அளித்த புகாரின் பேரில் பேரூராட்சி தலைவி சுப்புலட்சுமி மற்றும் அவரது கணவர் சாந்தாராம் ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பி. ஜேம்ஸ் லிசா