ஊட்டி சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் ..!

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சரண் கிஷோர். இவர் நண்பர்கள் வசீகரன், ஜெகதீஷ் ஆகியோருடன் சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு…

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சரண் கிஷோர். இவர் நண்பர்கள் வசீகரன்,
ஜெகதீஷ் ஆகியோருடன் சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள கேஸ் பங்கில் கேஸ் நிரப்பிவிட்டு குன்னூர் சாலை வழியாக உதகை சென்று கொண்டிருந்தனர். அப்போது முதல் கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று போது, காரில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரண் கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள், காரை விட்டு இறங்கி ஓடினர். பின்னர் கார் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற பாலகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர், சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீ விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.