தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் தென்னை நார் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட
பயங்கர தீ விபத்தில் 100 டன் மதிப்பிலான தென்னை கூந்தல்கள் எரிந்து சேதமானது.
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பகுதியில் ராசா முகமது என்பவருக்கு சொந்தமான தென்னை நார் உற்பத்தி செய்யும் ஆலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகம் காரணமாக மளமளவென தீ பரவியது. இதனையடுத்து சுரண்டை பகுதியில் இருந்து சென்ற மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் தீயணைப்பு பணியில் ஈடுபட்டது.
சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்தில் சுமார் 100 டன் தென்னை கூந்தல் எரிந்து சேதமானது. இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.







