சைக்கிளில் சென்ற சிறுவன்; துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்

சைக்கிளில் சென்ற சிறுவனை தெரு நாய் துரத்தி சென்று கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 12 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே சாலையில் சைக்கிளில்…

சைக்கிளில் சென்ற சிறுவனை தெரு நாய் துரத்தி சென்று கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 12 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே சாலையில் சைக்கிளில் வழக்கம் போல் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தெரு நாய் ஒன்று திடீரென சிறுவனை கடித்து இழுத்தது. இதனால் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சிறுவன் அலறியும் சில நிமிடங்கள் வரை நாய் அவரை விடவில்லை.

இந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்போது அந்த காட்சி இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதே தெரு நாய் அப்பகுதியைச் சேர்ந்த நளினி சைபுதீன் உட்பட நான்கு பேரை ஒரே நாள் கடித்துள்ளது. இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து கேரளாவில் தெரு நாய் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் குற்றம்சாட்டியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.