பங்கு விற்பனையில் அடியெடுத்து வைக்கும் வரைகலை நிறுவனம்

இந்தியாவின் முன்னணி காட்சிக்கலை படப்பிடிப்பு கூடங்களில் ஒன்றான பாண்டம் எப் எக்ஸ் நிறுவனர் முதன் முதலில் பங்கு விற்பனையில் அடியெடுத்து வைத்துள்ளது.   இந்தியாவின் முன்னணி காட்சிக்கலைப் படப்பிடிப்புக் கூடங்களில் (VFX Studios) ஒன்றான…

இந்தியாவின் முன்னணி காட்சிக்கலை படப்பிடிப்பு கூடங்களில் ஒன்றான பாண்டம் எப் எக்ஸ் நிறுவனர் முதன் முதலில் பங்கு விற்பனையில் அடியெடுத்து வைத்துள்ளது.

 

இந்தியாவின் முன்னணி காட்சிக்கலைப் படப்பிடிப்புக் கூடங்களில் (VFX Studios) ஒன்றான பாண்டம் டிஜிட்டல் எபெக்ட்ஸ் லிமிடெட் (PhantomFX) நிறுவனம், உலகம் முழுவதும் பல திரைப்படங்களுக்கும், இணையத் தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும் பிரமிக்க வைக்கும் தத்ரூபமான காட்சி விருந்துகளை உருவாக்கித் தந்திருக்கிறது.

 

இப்போது, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயரிய தரத்திலான டிஜிட்டல் அரங்குகளை (Digital Studios) 40 கோடி ரூபாய் முதலீட்டில் அமைப்பதற்கான மகத்தான விரிவாக்கத்திற்கு PhantomFX இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இது தொடர்பாக கூறிய இதன் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான பிஜோய் அற்புதராஜ், எதிர்காலத்தில் மிக பிரம்மாண்டமன அளவில் வளர்ந்து வரக்கூடிய ஆற்றல் படைத்த தொழில்களாக இவை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சாத்தியமுள்ள மற்ற வெளிநாட்டுச் சந்தைகளை நாடுவதற்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். சென்னையிலும் மும்பையிலும் தற்போது 25ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்திருக்கும் ஸ்டுடியோக்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரு இலட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டதாக விரிவாக்கம் செய்யப்படும்.

 

விஜய் நடித்த பீஸ்ட், கமல்ஹாசனின் விக்ரம், ராஜமௌலியின் வீர காவிய அதிரடித் திரைப்படமான RRR, சூர்யாவின் ஜெய்பீம் போன்ற இந்தியாவின் வெற்றிப்படங்கள் பலவற்றிற்கு VFX காட்சிக்கலையை இந்த நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. பிரம்மாஸ்த்ரா, ஆதிபுருஷ்தே ஆகியனவற்றோடு ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் இணையத் தொடர்களுக்கும் பிரமிக்க வைக்கும் VFX காட்சிக்கலை அமைப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது.

இந்நிலையில், PhantomFx நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரஜினிகாந்த் கூறும் போது, இந்த நிறுவனம் பொதுமக்களுக்குப் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டுவதற்காக சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான SME IPOவிற்குள் முதல் முறையாக அடியெடுத்து வைப்பதற்காக இந்திய தேசிய பங்குச் சந்தையின் NSE-EMERGE தளத்தில் இணைந்துள்ளது என்றார். பங்குச்சந்தையின் மூலமாக கணிசமான முதலீட்டைத் திரட்டுவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். பங்குச் சந்தையில் நுழையும் முதலாவது தென்னிந்திய VFX நிறுவனம் PhantomFx தான் என்று அவர் தெரிவித்தார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.