சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சங்கராபுரம் அருகே உள்ள உலகுடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த
வரதராஜனின் மகன் விஸ்வா. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அந்த ஊரில் இருந்த 85 அடி ஆழமுள்ள கிணற்றில் விஸ்வா மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென தவறி கிணற்றுக்குள்ளே விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு நிலைய அலுவலர்கள் 3 மோட்டார்கள் வைத்து கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றி சிறுவனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சங்கராபுரம் போலீசார் விஸ்வாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.