GPS கருவி பொருத்திய பைக் மாயம், அதனை கண்டுபிடித்து தருமாறு காவல்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் துளசி நகரில் வசித்து வருபவர் பரத். இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ரூ 1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புடைய விலை உயர்ந்த பைக் ஒன்றை கடந்த 2019- ஆண்டு வாங்கியுள்ளார். பைக் திருடு போனால் கண்டுபிடிப்பதற்காக அதனுள் GPS கருவி பொருத்தி வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 18ஆம் தேதி அன்று அவர் பைக் திருட்டு போன நிலையில் அதனை கண்டுப்பிடிக்க கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்று கொளத்தூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து புகார் அளித்துள்ளார். அந்த சிசிடிவியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பைகை திருடி செல்லும்காட்சி தெளிவாக பதிவாகி இருந்தாகவும், அந்த நபர் வசித்து வரும் பகுதியிலேயேதொடர்ந்து பைக்குகள் திருடு போவதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், காவல்துறையினர் முறையாக ரோந்து பணியில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 10-க்கு மேற்பட்ட வாகனங்கள் திருடப்பட்டு இருப்பதாகவும், இதுவரை திருடப்பட்ட வாகனங்கள் ஒன்று கூட கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அந்த பகுதிமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். கொளத்தூர் காவல்துறையினர் விரைந்து விசாரணை நடத்தி பைக் திருடர்களைகண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர்.







