பஞ்சாப் முன்னாள் அமைச்சரை கைது செய்தது ஊழல் தடுப்புத் துறை

ஊழல் குற்றச்சாட்டின்பேரில் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் பாரத் பூஷன் அஷுவை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசால் கைது செய்யப்பட்ட முந்தைய…

ஊழல் குற்றச்சாட்டின்பேரில் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் பாரத் பூஷன் அஷுவை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசால் கைது செய்யப்பட்ட முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த இரண்டாவது நபர் இவர் ஆவார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சராக இருந்தவர் பரத் பூஷன் அஷு. இவரது பதவிக் காலத்தில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

அதனடிப்படையில், இவரை இன்று மொஹாலியில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஜூன் மாதம், முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சாது சிங் தரம்சோட்டை ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

அப்போது காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி அரசு சுமத்தியுள்ளது என்றார் அஷு.

பஞ்சாபில் பகவந்த் மன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

டெல்லிக்கு பிறகு, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.