மின்சார கட்டண உயர்வு கருத்து கேட்பு கூட்டம் நிறைவு

மின்சார ஒழுங்குமுறை ஆணைய கருத்து கேட்பு கூட்டம் நிறைவடைந்தது. இதற்கான முடிவுகள் ஆலோசனை செய்யபட்டு விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின்பு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மின் கட்டண…

மின்சார ஒழுங்குமுறை ஆணைய கருத்து கேட்பு கூட்டம் நிறைவடைந்தது. இதற்கான முடிவுகள் ஆலோசனை செய்யபட்டு விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின்பு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மின் கட்டண உயர்வினால் வீட்டு வாடகை, கடை வாடகை, சிறுகுறு தொழில்களில் ஏற்படும் பாதிப்பு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர், செயலாளர் வீரமணி, மற்றும் உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள், அரசியல்கட்சிகளின் தொழிற்சங்க பிரதிநிதிகள், சிறுகுறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர்
கலந்துகொண்டனர்.


கருத்துக்கேட்பு கூட்டத்தில் பேச விரும்பிய பொதுமக்கள் காலை 9 மணி முதல் 10.30 மணிவரை தங்கள் பெயரை பதிவு செய்து, ஒருவர் பின் ஒருவராக கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்த மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர் உள்ளிட்டோர், மக்கள் கருத்துக்களை பரிசீலித்து முடிவுகளை வெளியிடுவதாக தெரிவித்தனர்.

அப்போது பேசிய தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சந்திரசேகர், கருத்துக்களை தெரிவிக்க 30 நாட்கள் நேரம் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது. அதற்கான நேரம் இப்போது முடிந்து விட்டது. கோவையில் என்ன சொன்னார்களோ, மதுரையில் என்ன சொன்னார்களோ அதுதான் இங்கேயும் பேசப்பட்டது. 8 கோடி பேரின்
கருத்துக்களை நாங்கள் கேட்க முடியாது. வேண்டும் என்றால் உங்கள் அனைவரின் கருத்துக்களையும் எங்களுக்கு எழுதி அனுப்பலாம்.

பொதுமக்களின் கருத்துக்கள் ஏற்க்கபட்டுள்ளது, பொதுமக்களின் கருத்துக்களை நாங்கள் மனதில் ஏற்றி கொண்டோம். இதற்கான முடிவுகள் ஆலோசித்து வெளியிடப்படும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.