ஜம்மு காஷ்மீரில் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு – காவல்துறை சந்தேகம்

ஜம்மு காஷ்மீரில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ள செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து காவல்துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின்…

ஜம்மு காஷ்மீரில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ள செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து காவல்துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் தொடர்ந்து சோதனைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறான சோதனைகள் மேற்கொள்ளப்படும்போது பயங்கரவாதிகள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்துவதும், பாதுகாப்புப்படையினர் பதில் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பாம்போர் பகுதியில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஃபரூக் அகமது மிர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் வயல்வெளியில் வீசப்பட்டுள்ளது.

இவர் முன்னதாக ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவிலிருந்து ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். மிர், ஆஃப் டியூட்டியில் இருந்தபோது கொலை செய்யபட்டுள்ளதாக காவல்துறை தனது முதல்கட்ட விசாரணையில் சந்தேகித்துள்ளது.

இந்த காவல்துறை அதிகாரி பயங்கரவாதிகளால் வீட்டிலிருந்து கடத்தப்பட்டு பின்னர் அருகில் உள்ள வயல்வெளியில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.