மணப்பாறை அருகே கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆனாம்பட்டி படுகைகளம் பகுதியினை சேர்ந்த முருகேசன், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கருத்தில் கொண்டு எலெக்ட்ரிக் பைக் வாங்கியுள்ளார். சிங்கப்பூர் சென்ற முருகேசன் தனது நண்பரான பாலு என்பவரிடம் அந்த எலெக்ட்ரிக் பைக்கை கொடுத்துச் சென்றுள்ளார்.
தனது கடையில் எலெக்ட்ரிக் பைக்கை நிறுத்தியிருந்த பாலு, அதிலிருந்து புகை வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சில நிமிடங்களில் எலெக்ட்ரிக் பைக் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியுள்ளது. அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் வசிக்கும் தேவராஜ் எலெக்ட்ரிக் பைக் வாங்கி கடந்த 7 மாதங்களாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் அதிகாலையில் எரியத் தொடங்கியுள்ளது.
அண்மைச் செய்தி: “BGR Energy விவகாரம்; ஒரு நபர் ஆணையம் வேண்டும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை”
தீ பரவியதில் அருகில் இருந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க்கும் வெடித்துள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்துள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக தேவராஜின் குடும்பத்தினர் உயிர் தப்பினர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








