முக்கியச் செய்திகள் இந்தியா Instagram News

50 மாணவிகளுடன் தனி ஒரு மாணவனாக தேர்வு எழுத சென்றதால், பதற்றத்தில் மயங்கி விழுந்த 12 ஆம் வகுப்பு மாணவன்

பீகாரில் உள்ள பிரில்லியன்ட் பள்ளி தேர்வு மையத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் 50 மாணவிகளுடன் தனி ஒரு மாணவனாக தேர்வு எழுத சென்றதால் பதற்றத்தில்  மயங்கி விழுந்துள்ளார்.

பீகார் ஷெரீப்பின் அல்லாமா இக்பால் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் படிக்கும் மாணவன் “பதட்டத்தால்” மயங்கி விழுந்துள்ளார். இடைநிலைத் தேர்வு ழுத சென்ற மணிசங்கர் அவர் தேர்வறையின் உள் சென்றதும், தேர்வறையில் 50 மாணவிகள் தேர்வுக்காக அமர்ந்திருப்பதையும் இவர் மட்டும்மே அங்கு மாணவன் என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் 50 பெண்களுடன் சேர்ந்து இடைநிலைத் தேர்வை எழுதப் போவதை உணர்ந்தால் சிறுவனுக்குக் காய்ச்சல் ஏர்படும அளவுக்கு பதற்றமடைந்துள்ளான். இதனால் சற்று நேரத்தில் மயக்கமடைந்து விழவே பள்ளி நிர்வாகம் மாணவனை அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து மாணவனின் அத்தை கூறுகையில், தேர்வு மையத்திற்குச் சென்று, அறை முழுவதும் மாணவிகள் இருப்பதைக் கண்ட மாணவன் பதற்றமடைந்து, காய்ச்சல் ஏற்பட்டுமயக்கமடைந்துள்ளார்.” என்று சிறுவனின் அத்தை தெரிவித்துள்ளார்.

மாணவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சீரான நிலையில் உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய திமுக எம்எல்ஏ-க்கு அண்ணாமலை கண்டனம்

EZHILARASAN D

இந்தியையும், இந்துத்துவா சக்திகளை நிலை நாட்ட பிரதமர் மோடி செயல்படுகிறார் – வைகோ

Dinesh A

’2008 ஆம் வருஷத்துக்கு பிறகு பிறந்தா சிகரெட் இல்லை’: நியூசி. புதுச்சட்டம்

EZHILARASAN D