முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

அழிந்துவரும் கடற்கரைகள் குறித்து எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி; மத்திய இணையமைச்சர் பதில்

அழிந்துவரும் கடற்கரைகள் குறித்து எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார். 

நாட்டின் கடற்கரைப் பகுதி இயற்கைப் பேரிடர்களால் அழிந்துவருவது பற்றியும், அதன் அமைப்பு மாறிவருவது பற்றியும் மாநிலங்களவையில் தி.மு.. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு பதில் அளித்த  மத்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ‘ புவி அறிவியல் அமைச்சகத்தின் ஓர் அங்கமான சென்னையிலுள்ள தேசிய கடற்பகுதி ஆராய்ச்சி மையம் செயற்கைகோள் மற்றும் கள ஆய்வுகளின் மூலம் கடற்கரைப் பகுதிகளை கண்காணித்து வருகிறது. இதன்படி இந்தியாவின் 6907 கி.மீ. நீளமுள்ள ஒட்டுமொத்த கடற்கரைப் பகுதியையும் தொடர் ஆய்வு செய்து வரைபடம் தயாரிக்கிறது.

அதன்படி, இயற்கை சீற்றங்களாலும், மனித ஆக்கிரமிப்புகளாலும் கடற்கரைப் பகுதியின் எல்லைகள் மாறிவருவது தெரிய வந்திருக்கிறது.

தேசிய கடற்பகுதி ஆராய்ச்சி மையம் கடந்த 1990 முதல் 2018 வரையிலான 28 ஆண்டுகளில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு ஒவ்வொருமுறையும் செய்த ஆய்வின் அடிப்படையில் கடற்கரைப் பகுதி வரைபடங்களைத் தயாரிக்கிறது. அந்த ஆய்வின்படி பார்த்தால் 34 % கடற்கரைப் பகுதி கடல் அரிப்புக்கும் மனிதர்களால் ஏற்படும் அழிவுக்கும் இலக்காகி தனது முந்தைய வடிவத்தை இழக்கிறது. 27% கடற்கரைப் பகுதி இயற்கையான மாற்றங்களால் தனது வடிவத்தை இழக்கிறது. இந்தியாவில் 6907 கி.மீ. நீளமுள்ள கடற்கரைப் பகுதியில் 39% மட்டுமே, அதாவது சுமார் 2700 கி.மீ. நீளமுள்ள கடற்பகுதி மட்டுமே தனது வடிவத்தை மாற்றாமல், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படாமல் இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 991 கி.மீ. நீளமுள்ள கடற்கரைப் பகுதியில் 423 கி.மீ. நீளத்திற்கான கடற்பகுதி இயற்கைச் சீற்றங்களுக்கு இலக்காகிறது. அதன் வடிவமும் மாறுகிறது.

இந்த அழிவிலிருந்து கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்க, ஒவ்வொரு ஆண்டும் பெறப்படும் ஆய்வு அறிக்கைகள் மற்றும் வரைபடங்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்படுகிறது. அதன்பிறகான ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகளின்படி கடற்பகுதிகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடற்கரைப் பகுதிகளை அழிவிலிருந்து காக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாண்டிச்சேரி மாநிலத்தில் இரண்டு இடங்களில் சோதனை முயற்சியாக அறிவியல்பூர்வமான சில நடவடிக்கைகள் புவி அறிவியல் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கடற்பகுதியில் இழந்த நிலப்பரப்பை மீட்கமுடியும்.

கேரள மாநிலம் செல்லனம் கடற்கரை கிராமத்தில் இந்த கடற்கரைப் பகுதி அரிப்பு தடுப்புத் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக, சமீபத்திய பருவமழைக்குப் பிறகும் அந்தப் பகுதியில் எந்தவிதமான அழிவோ, மாறுதலோ ஏற்படவில்லை.

கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்க இதுபோன்ற தொழில்நுட்ப உதவிகளை கடலோர மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் கோவா, லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வழங்கி வருகிறது ‘ என ஜிதேந்திர சிங் பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இன்னும் பத்து நாட்களில் “தளபதி 67” அப்டேட் எதிர்பார்க்கலாம் – லோகேஷ்கனகராஜ்

Yuthi

லோகி சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் வரும் விஜய்?

Web Editor

பிரதமர் மோடிக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

Mohan Dass