முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் -அமைச்சர் பி.கே.சேகர்பாபு

தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்படவுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை முதல் அடுத்த மாதம் 27ம் தேதி வரை மொத்தம் 41 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும். இதனை முன்னிட்டு இன்று (16.11.2022) மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். தரிசனத்திற்குச் சிறு வழிப்பாதை, பெரு வழிப்பாதை என அனைத்து பாதைகள் வழியாகவும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்படவுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு அறிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை 16.11.2022 முதல் 27.12.2022 வரையும் மற்றும் மகர விளக்கு ஜோதி திருவிழா 27.12.2022 முதல் 14.01.2023 வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தகவல் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் மையம் 16.11.2022 முதல் 20.01.2023 வரை செயல்பட உள்ளது. மேலும் தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் இத்தகவல் மையச் சேவையினை கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணான 044-28339999 ல் அழைத்துப் பயன்படுத்திக் கொள்ளாம் எனவும் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் பட்டதில் இளைஞர் உயிரிழப்பு!

Jayapriya

ஆதிச்சநல்லூரில் விரைவில் அருக்காட்சியகம் – மத்திய அரசு தகவல்

Web Editor

வடமாநில தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ விவகாரம்; யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

Web Editor